• அழிந்து வரும்‌ தமிழர்களின்‌ பாரம்பரியம்‌ மற்றும்‌ கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும்‌.

  • விவசாயிகள் விளைவித்த பொருட்களுக்கான ஏற்றுமதி வாய்ப்பை அரசு வழங்கிட வேண்டும்.

  • கொங்கு வேளாளக்‌ கவுண்டர்கள்‌ சமுதாயத்தை மிகவும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ பட்டியலில்‌ சேர்க்க வேண்டும்‌.

விவசாய முன்னேற்றக் கழகம் பிலவ வருடம் சித்திரை முதல் நாள் புதன்கிழமை 14/04/2021 அன்று நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம் ஒருவந்தூர் கிராமம், செல்லிபாளையத்தில் மாங்கனி தோப்பில் முதன் முதலில் விவசாய முன்னேற்றக் கழக கட்சி துவங்குவது குறித்து முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நாமக்கல் மாவட்டம் காவேரி நீரேற்று பாசனதாரர் சங்கத்தினுடைய செயலாளர் திரு. K. பாலசுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விவசாய முன்னேற்றக் கழகம் முறைப்படியான கூட்டம் 27.07.2021 அன்று நடைபெற்று இக்கூட்டத்தில் கட்சியினுடைய நிர்வாக தலைவர் திரு. செல்ல.இராசாமணி பி.காம்., பி.எல்., அவர்களும், பொதுச்செயலாளராக திரு. K. பாலசுப்பிரமணியன் அவர்களும் பொருளாலராக திரு. R. இராமசாமி அவர்களும் முறைப்படி தேர்ந்தெடுக்கப்படனர். கட்சிமினுடைய தலைமை அலுவலகம், விவசாய முன்னேற்றக் கழகம், 19/1, இராசிகுமரிபாளையம் தெரு, மோகனூர் அஞ்சல், மோகனூர் வட்டம், நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு, இந்தியா - 637 015. கைபேசி.எண். 94435 48316, அலுவலக கைபேசி எண். 04285 293316. விவசாய முன்னேற்றக் கழக கட்சியினுடைய கொள்கைகள் சுமார் 65க்கும் மேற்பட்ட கொள்கைகளை கொண்ட கட்சியாகும். கட்சி தொடங்கப்பட்ட நாளிலில் இருந்து இன்று வரை மக்களுக்காக பல்வேறுகட்ட போராட்டங்களை விவசாய முன்னேற்றக் கழகம் தொடர்ந்து நடத்தி வருகிறது.

விவசாய முன்னேற்றக் கழகம்

தான் உழைத்த பணத்தை வங்கியில் போடாமல் உன் உணவுக்காக மண்ணில் போடுகிறான் விவசாயி.! விவசாயத்தை துறந்த நாடும் விவசாயியை மறந்த நாடும் ஒருபோதும் உருப்பட முடியாது